விருதுநகர் அருகே சாலையோரத்தில் மது அருந்தியவர்களை கண்டித்த காவல் சார்பு ஆய்வளாரை மிரட்டியது தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர்-சாத்தூர் 4 வழிச்சாலையில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு வாகன காவல் சார்பு ஆய்வாளர் காமராஜ் தலைமையில் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சென்றனர். அதில் மருளூத்து கிராம விலக்கருவே பேருந்து நிறுத்தத்தில் வாகனம் நின்று கொண்டிருந்ததை பார்வையிட்டடு ஆய்வு செய்தார். அப்போது, வாகனத்தின் பின்புறம் 4 பேர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்களாம்.
இது குறித்து உடனே காவல் சார்பு ஆய்வாளர் தட்டிக் கேட்டாராம். அதற்கு அவர்கள் தகாத வார்த்தைகள் பேசியதோடு மிரட்டியும் உள்ளனர். இது குறித்து காமராஜ் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் 4 பேர் மீதும் போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர். அதையடுத்து அவர்களிடம் போலீஸார் விசாரணை செய்ததில் மதுரையைச் சேர்ந்த சடையாண்டி(50), பழனிமுருகன்(35), சுந்தரேஸ்வரன்(33) மற்றும் பழனிச்சாமி(17) என்பதும், மருளூத்து அருகே பழுதாகி நின்றிருந்த லாரியை சரி செய்வதற்காக வந்ததும் தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.